கேரளாவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல் : 1.5 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!!

12 November 2020, 9:49 am
Kanja Seized - Updatenews360
Quick Share

கோவை : கேரளாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

இன்று காலை மதுக்கரை காவலர்கள் மதுக்கரை மரப்பாலம் கீழே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட  இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்ளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் பயணம் செய்து வந்த அகில் (வயது 20), சரோன் (வயது 20) ஆகிய இரு கேரள நபர்கள் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா கொண்டு வந்தது தெரியசந்தது.

கேரளா வாலிபர்களிடமிருந்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். கேரளா கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்த காவல் துறை பின்னர் சிறையில் அடைத்தனர்.

Views: - 26

0

0