சரக்கு வாகனத்தில் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்தல்: இருவர் கைது

20 July 2021, 9:57 pm
Quick Share

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சரக்குவாகனத்தில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, 62 லட்ச ரூபாய் மதிப்பிலான 327 கிலோ கஞ்சா மூட்டைகளை இந்திய போதை பொருள் கட்டுப்பாட்டு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்த போது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மூடப்பட்ட சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். இவரிடம் விசாரித்த போது, ஆந்திராவுக்கு காய்கறி ஏற்றிச் சென்று, திரும்பி வருவதாக கூறினார். வாகனமும் காலியாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வாகனம் முழுதையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, சரக்கு ஏற்றிச் செல்லும் பகுதியில், விசேஷ அறை அமைத்து, சுமார் 62 லட்சரூபாய் மதிப்பு மதிப்புள்ள, 327 கிலோ கஞ்சா மூட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளியான, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில், அங்குள்ள போலீசார் உதவியுடன் பிடித்தனர்.இருவரையும் கைது செய்த போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 83

0

0