உல்லாசமான வாழ்க்கையை வாழ கஞ்சா கடத்தல் : கம்பி எண்ணும் காதல் ஜோடி !!

16 June 2021, 7:34 pm
Lovers Arrest - Updatenews360
Quick Share

கோவை : பீளமேட்டில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 21) கல்லூரி படிப்பை முடித்தவர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி (வயது 21). இவர்கள் இருவரும் காதலர்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று நேரு நகர் வீரியம்பாளையம் ரோட்டில் போலீசார் ரோந்து செல்லும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கொண்டு வந்த பையில் சோதனை செய்த போது சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உட்பட போலீசார் சோதனை செய்ததில் கஞ்சா பிடிபட்டது. இந்த நிலையில் அவர்களை பிடித்து பீளமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வினோதினி டிப்ளமோ நர்சிங் படித்தவர். சூரிய பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் இருவரும் கோவை காந்தி மாநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர்.

திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேறு கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பீளமேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Views: - 209

0

0