கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு குறி வைத்து கஞ்சா சப்ளை : இருவர் கைது

8 January 2021, 12:13 pm
cannabis -Updatenews360
Quick Share

கோவை : கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நேற்று இரவு குனியமுத்தூர் போலீசார் புட்டுவிக்கி சாலை சந்திப்பில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை விசாரித்ததில் அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்கள் பெயர் வினோத்குமார் (வயது 33), கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Views: - 29

0

0