கோவையில் இனி 40 கி.மீ மேல் வேகமாக செல்ல முடியாது… ஸ்பீட் ரேடார் கேமராக்கள் பொருத்தம்…!!!
கோவையில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அபராதவிதிப்பு உரிய ஆவணங்களுடன் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் கூறுகையில், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர காவல் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை சத்தியமங்கலம் சாலை பாலக்காடு சாலை ஆகிய மூன்று முக்கியமான சாலைகளில் 3D ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை வேகத்தை நாம் கண்டறியலாம். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும். எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்த இ- செலான் அனுப்பப்படும்.
கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட மாநகர காவல் துறையினர் உடன் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.