அமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது ? செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘!!!

Author: Udayachandran
27 July 2021, 7:44 pm
Senthil Balaji-Updatenews360
Quick Share

அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ சலுகை வழங்கவோ முடியாது என நீதிபதி காட்டமாக கூறியுள்ளார்.

கடந்த 2011 – 2015-இல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டனர்.

மேலும், சிறப்பு நீதிமன்றம் மற்ற இரண்டு வழக்குகளிலும் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று நீதிமமன்றத்தில் ஆஜராகவில்லை.

செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருப்பதாலும் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கூறினார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை அளிக்கவோ முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார்.

Views: - 185

0

0