மீண்டும் உச்சத்துக்கு சென்ற தலைநகரம்… கோவையின் நிலை தெரியுமா? தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 7:35 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 718 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,26,917ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று சென்னையில் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 109 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,481 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 758 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 192ஆக அதிகரித்துள்ளது.

Views: - 151

0

0