தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : எமனாக வந்த கார்!!

Author:
23 June 2024, 11:07 am
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி, பார்வதி, அமராவதி, சண்முகத்தாய் ஆகிய பெண்கள் தெருவோரத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த கார் அதிவேகமாக சென்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. கார் மோதியதில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே சாந்தி, அமராவதி,பார்வதி ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சண்முகத்தாய் என்பவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு ஒன்று திரண்ட இறந்தவர்களின் உறவினர்களின் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இங்கு வேகத்தடை ஏதும் இல்லாததால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இறந்தவர்களின் உறவினர்களை சாலை மறியலில் ஈடுபட விடாமல் தற்காலிகமாக தடுத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மணிகண்டன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 212

0

0