சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதிய கார் : தூக்கி வீசப்பட்ட இருவர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2022, 1:14 pm
கோவை : பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதும் CCTV காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர்.
அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதி வேகமாக வந்த கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிவேகமாக மோதிய கார் இருசக்கர வாகனத்தில் மோதும் காட்சிகள் அப்பகுதியில் வைத்திருந்த CCTV கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
0
0