உ.பி.யில் விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரம்: பிரதமருக்கு முத்தரசன் கேள்வி

Author: kavin kumar
12 October 2021, 8:33 pm
Quick Share

கிருஷ்ணகிரி: உ.பி.யில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாற்று கட்சியிலிருந்து இணையும் விழா மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் அதிமுக விடுதலை சிறுத்தைகள் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சியிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், கடந்த 11 மாதங்களாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்கிபூர் விவசாயிகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உத்தரப்பிரதேச அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை முன்னெடுத்து நடத்தியதில் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை. மீண்டும் அதே உச்சநீதிமன்றம் தலையீட்டின் படி உத்தரப்பிரதேச காவல்துறை மத்திய உள்துறை அமைச்சர் மகனை விசாரணைக்கு அழைத்து பதினோரு மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது மத்திய உள்துறை இணையமைச்சர் நானோ அல்லது எனது மகனோ அங்கு இருப்பது உறுதி செய்தால் அதற்கு பொறுப்பேற்று எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்தார். தற்போது அமைச்சரின் மகன் அங்கு இருந்தது அவரது கைப்பேசி மூலம் உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏன் மத்திய உள்துறை இணை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் பிரதமர் ஏன். மத்திய இணை அமைச்சரை இன்னும் டிஸ்மிஸ் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், சம்பவம் நடந்து இன்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், பாரத பிரதமர் இதுவரையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது சம்பவத்தில் தூண்டிய நபர்களுக்கு ஒரு கண்டனமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பி அவர், வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசும் பாரத பிரதமரே முழு பொறுப்பு என தெரிவித்தார். மேலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வால் விலைவாசி பல மடங்கு உயர்ந்து வருகிறது. தமிழக அரசு மூன்று ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்தால் மத்திய அரசு 40 ரூபாய் பெட்ரோல் விலையை உயர்த்துகிறது.

இதனால் ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலங்களில் வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. எனவே தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக அனைத்து விதமான உணவுப் பொருட்களை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார். பிறகு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி அதிக அளவில் முன்னணியில் இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முத்தரசன், மிக இக்கட்டான சூழலில் தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, மக்களின் துயர்துடைக்க கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். 14 மளிகை பொருட்கள் இலவசம் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை மிக சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். இதன் வெளிப்பாடே திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதனையும் அதை தற்போது உணர முடிகிறது என்றும் தெரிவித்தார்.

Views: - 138

0

0