நள்ளிரவில் அதிவேகமாக ஒட்டியதால் கார் கவிழ்ந்து விபத்து : நடிகை யாஷிகா மீது போலீசார் வழக்குப்பதிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 2:07 pm
Yashika Case - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார்.

மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Views: - 2508

1

0