தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக சென்று விபத்து ஏற்படுத்திய கார் : ஓட்டுநரை கைது செய்த போலீசார்!!!

Author: Udayachandran
27 July 2021, 1:06 pm
Salem Accident Arrest -Updatenews360
Quick Share

சேலம் : சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேர்ந்த அஜித் என்ற இளைஞர், பழனிக்கு சென்று விட்டு அவரது நண்பர் அருண் உடன் நேற்று முன்தினம் சொந்த மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தை முந்திக் கொண்டு வேகமாக வந்த கருப்புநிற கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

பின்னர் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதும் காட்சிகள், பின்வந்த கார் ஒன்றில் உள்ள கேமிராவில் பதிவானது.

இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி இளைஞர்கள் விபத்துக்குள்ளாகும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 284

0

0