கார் கவிழ்ந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.!!

16 July 2020, 5:43 pm
Accident 6 Dead -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனம் அருகே டாடா சுமோ மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுடுவைத்தவளை கிராமத்திலிருந்து டாட்டா சுமோவில் முருகேசன்( வயது 40), ஸ்ரீ (வயது 35), முருகராஜ்(வயது 38), மலர்(வயது 35), முத்துமோனிஷா (வயது 9), மாயா (வயது 7), ஹரீஷ்(வயது 6) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 8 பேர் கொண்ட டாடா சுமோ சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சென்னை அவடியில் இவர்களுக்கு சொந்தமான இரும்புகடை உள்ளது. சொந்த ஊர் சென்று சென்னை திரும்பி உள்ளனர் இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் எதிர்பாரத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டாடா சுமோ மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் மற்றும் ஓட்டுநர் உட்பட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹரிஷ் மற்றும் மாயா ஆகிய இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

அவர்களை மீட்ட போலீசார் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்துக்கு கவால் கண்காணிப்பாளர் மற்றும் கவால் துணை கண்காணிப்பாளர் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த விபத்து பற்றி ஒலக்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.