கோவை அருகே கார் தலைக்குப்புற ஆற்றில் கவிழ்ந்து விபத்து : பயணம் செய்த 5 பேருக்கு நேர்ந்த கதி?
1 February 2021, 7:17 pmகோவை : மேட்டுப்பாளையத்தில் இருந்து அட்டப்பாடிக்கு காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் மணிஸ் (வயது 25). இவரது நண்பர்கள் ராஜீவ் (வயது 36), பஷீர் (வயது 42), ஜெர்ரி (வயது40), பாபு (வயது38) ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கணுவாய் பாளையம் வழியாக காரில் அட்ட பாடி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கெண்டேபாளையம் பிரிவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தடுப்பு சுவரை இடித்து கொண்டு நீரோடையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
தண்ணீரின் குறைவாக இருந்ததால் காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 5 பேரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து காரமடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0
0