பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. அடுத்தடுத்து செத்து மடிந்த சோகம் : நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 1:48 pm
Car Dead -Updatenews360
Quick Share

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற பாலர் பள்ளி தெருவினை சேர்ந்த நாகராஜன் நித்திஷா (வயது 7 ), நித்திஷ் (வயது 5 ) வடக்கன் குளத்தை சேர்ந்த சுதன் அவரது மகன் பிஷாந்த் (வயது 4) ஆகிய மூன்று குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு விட முடியாமல் உயிரிழந்து விட்டனர்.

மூன்று பிஞ்சு குழந்தைகள் காரில் டோர் லாக் ஆகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் பணகுடி காவல்கிணறு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி மருத்துவமனைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா விரைந்து வந்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

Views: - 474

0

0