ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட கார் திருட்டு : கையும் களவுமாக திருடன் கைது!!

18 September 2020, 7:28 pm
Car Theft Arrest- updatenews360
Quick Share

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே கார் ஒன்றை திருடி சென்றவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ரயில் நிலையம் அருகே ஆம்னி கார் ஒன்றை வாலிபர் ஒருவர் நிறுத்தி சென்றார். தவறுதலாக சாவியை தனது வண்டியிலேயே அவர் வைத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காரை திருடிச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த கார் உரிமையாளர் கூச்சலிடவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரட்டி பிடித்தனர். மேலும் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர் பெயர் இசக்கிமுத்து என்பதும், உரிமையாளர் அசந்த நேரத்தில் காரை திருடிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து இசக்கிமுத்துவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.