பிரசாந்த் பூஷன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் : கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!
19 August 2020, 12:52 pmகோவை : மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதித்துறையையும் விமர்சித்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி கோவையில் நீதிமன்றம் முன்பு இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூத்த வழக்கறிஞர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்,
பணி ஓய்வு பெற்ற பின்னர் நீதிபதிகளை எம்பி மற்றும் ஆளுநர் ஆகிய பதவிகளில் நியமிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.