விழுப்புரம் : முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டு இருப்பதாகவும், நீட் தேர்விற்கு சீராய்வு மனு திமுக அரசு தாக்கல் செய்யவில்லை எனவும், நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால் விடுத்த அவர் ஏன் நீட் குறித்து நேரடி சவாலில் பேச ஸ்டாலின் தயங்குகிறார் என கேள்வி எழுப்பினார்.
பிரச்சார மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது திடீரென ஒருவர் ‘பேசுவதை நிறுத்து‘ என கூச்சலிட்டத்தால் அதிமுகவினரை மிரட்ட திமுக நினைக்க வேண்டாம் திமுகவினர் ஒருதனுக்கு பிறந்து இருந்தால் இந்த மேடையில் 12 மணி வரை நிற்க தயார் தைரியம் இருந்தால் வா என முன்னாள் அமைச்சர் சவால்விட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
மேலும் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என பேசினார். போலீசார் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சரின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.