சொத்துக்காக தாய், தந்தை, தம்பியை கொன்ற வழக்கு : ஏசி வெடித்ததாக நாடகமாடிய அண்ணன், அண்ணிக்கு தூக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2021, 7:29 pm
Villupuram Court Order - Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில்
கணவன், மனைவிக்கு 4 தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ராஜி மற்றும் கலைச்செல்வி தம்பதியினர் தனது இருமகன்களுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் மூத்த மகன் கோவர்த்தனுக்கு தீப காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் செய்த கையோடு மருமகள் சொத்து பிரச்சனையை தனது கணவனிடம் காதில் ஓதியுள்ளார். மனைவியின் மீது மயக்கம் கொண்ட கோவர்த்தனும் சொத்து நமக்குதான் என்று கூறி வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை பூதாகரம் ஆக, பெற்றோரோ தம்பிக்கும் சொத்தில் பங்குண்டு இதனால் சரி பாதியாக பிரித்து தருகிறோம் என கூறியுள்ளனர். சரி என்று அப்போதை மனமில்லாமல் கூறி வந்த தம்பதி பலே திட்டம் தீட்டினர்.

வீடு வாசல் கார் என அனைத்து நமக்கு மட்டும்தான் வேண்டும் என மனைவி கூற, தலையாட்டி பொம்மைபோல செயல்பட்ட கோவர்த்தனன், வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில் அந்த அறையில் மட்டும் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

இதனால் மளமளவென பிடித்த தீயில் தந்தை, தாய், தம்பி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையம், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தம்பதிகளும் கண்ணீர் விட்டு நாடகமாடினர்.

பின்னர் ஏசியில் தீ பிடித்துள்ளதாக இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் என தம்பதிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர். ஆனால் சந்தேகமடைந்த போலீசார், துருவி துருவி விசாரித்ததில் பெற்ற மகனே பெற்றோர் மற்றும் தம்பி மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.

சொத்துக்காக தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விட்டு ஏ.சி வெடித்து இறந்து விட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் குற்றவாளி என இன்று நீதிபதி அறிவித்துள்ள நிலையில் தண்டனை விவரம் மாலை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வாசிக்கப்பட்ட தீர்ப்பில் இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் நிதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார்.

சொத்துக்காக மனைவியின் பேச்சை கேட்டு 10 மாதம் பெற்றெடுத்த பெற்றோர்களையும், பாசம் மிகுந்த தம்பியையும் பெட்ரோல் குண்டுவீசி ஏசி வெடித்ததாக நாடகமாடிய தம்பதிக்கு கிடைத்த தண்டனை நீதிக்கு கிடைத்த வெற்றியாக அப்பகுதிமக்கள் பார்க்கிறார்கள்.

Views: - 246

0

0