சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரம் : ஒருவனுக்கு ஆயுள், மற்றொருவனுக்கு 20 வருட சிறை தண்டனை அளித்து நீதிபதி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 10:59 am
Sex Harrassed Judgement - Updatenews360
Quick Share

விழுப்புரம் : இரு வெவ்வெறு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளில் ஒருவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் செம்பராம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி. இவருக்கு அதே பகுதியை சார்ந்த உறவினரான இளையராஜா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு மிட்டாய் வாங்கி கொடுத்து முட்புதருக்கு சிறுமியை அழைத்துச்சென்று இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்தார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட  சிறுமியின் பெற்றோர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததிம் பேரில் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில்  சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து இன்று நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளையராஜா, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுப்பட்டு கிராமத்தை சார்ந்த 7 வயதுடைய சிறுமி கடந்த 2019-ம் ஆண்டில் டியூஷன் முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அதே பகுதியை சார்ந்த இளைஞர் பூபதி  வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்து இருபக்க கதவுகளையும் பூட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின்  பெற்றோர்கள் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தபுகாரின் பேரில் பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரவேல், குற்றம்சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பூபதி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 533

0

0