வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்: அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு…!!

2 December 2020, 10:07 am
anbumani cases - updatenews360
Quick Share

சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொள்ள வந்த பா.ம.க. தொண்டர்கள் சென்னை மற்றும் புறநகரில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

pmk protest - updatenews360

மேலும், சென்னை அண்ணாசாலையில் உள்ள தாமஸ் மன்றோ சிலை அருகே பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னைக்கு வரும் வழியிலேயே ஆங்காங்கே பா.ம.க. வினர் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் பலர் போலீசாரிடம் சிக்காமல் சென்னை அண்ணாசாலை வந்தடைந்தனர். பின்னர் பல்லவன் இல்லம் அருகே இருந்து தாமஸ் மன்றோ சிலை அருகே வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக வந்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 சதவீத இடஒதுக் கீட்டை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், நேற்று இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Views: - 27

0

0