முந்திரி பருப்பு வாங்கி மோசடி : கோவையில் அக்கா-தம்பி கைது..!

Author: Udayachandran
31 July 2021, 4:45 pm
Nuts Illegal Arrest- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இருந்து பருப்பு வியாபாரம் செய்வதாக கூறி சென்னையில் உள்ள மொத்த விற்பனை கடையில் இருந்து 180 கிலோ முந்திரி பருப்பை பார்சலில் பெற்றுக்கொண்டு போலியான முகவரி கொடுத்து ஏமாற்றிய அக்கா தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர். இவர் சென்னையில் முந்திரிப் பருப்பு மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா( 29 )மற்றும் அவரது சகோதரர் விவேக்( 28) ஆகிய இருவரும் தாங்கள் தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டி பகுதிகள் நட்ஸ் வேர்ல்டு என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும் தங்களது நிறுவனத்திற்கு 180 கிலோ முந்திரிப்பருப்பு வேண்டும் என்றம் ஆர்டர் கொடுத்தனர்.

இதை அடுத்து ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் 180 கிலோ முந்திரி பருப்பு மூட்டைகளை டிராவல்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். பார்சல் மூலம் வந்த முந்திரிப்பருப்பு மூடைகளை மோசடியான ஆவணங்கள் மூலம் வேறு முகவரிக்கு மஞ்சுளாவும் விவேக்கும் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

மேலும், முந்திரி பருப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர் . இதையடுத்து ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் கோவை ரத்தினபுரி போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா( 29) மற்றும் அவரது சகோதரர் விவேக்( 28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 217

0

0