புகழ் பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில் கால்நடை திருவிழா : அமைச்சர் பங்கேற்று சிறப்பு வழிபாடு!!

16 January 2021, 6:10 pm
Tirupur Cow temple -Updatenews360
Quick Share

திருப்பூர் : காணும் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு பிரசித்திபெற்ற ஆல்கொண்ட மால் கோவிலில் கால்நடை திருவிழா கோலகலமாய் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவார பட்டியில் அமைந்துள்ளது ஆல்கொண்ட மால் திருகோவில்.
ஆல்கொண்டமாலாக திருமால் எழுந்தருளியிருக்கும் இக்கோவிலில் கால்நடைகளின் உருவபொம்மைகளை வைத்து வழிபாடு செய்து கால்நடைகள் கறக்கு பாலை திருமாலுக்கு அபிசேகம் செய்து வழிபட்டால் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமோடு வாழும் என்பது இப்பகுதி மக்கள் பல்லாண்டு காலமாய் கடைபிடிக்கும் வழிபாட்டு வழக்கம்.

காணும் பொங்கலான இன்று ஏராளமான விவசாயிகள் இக்கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து கால்நடைகள் நலம் காக்க வழிபாடு செய்தனர். கோவிலுக்கு பொங்கலன்று பிறந்த கன்றுகளை தானமாக வழங்கினர்.

இதனிடையே கால்நடைபராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆல்கொண்ட மால் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அதன்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொரோனோ நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பக்தர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துகொண்டார்.

காலமெல்லாம் தமக்காக உழைக்கும், கால்நடை நலமோடு வாழ வேண்டி வழிபாடு செய்ய ஆல்கொண்ட மால் கோவிலில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

Views: - 1

0

0