சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி அம்மாமண்டபம் படித்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர். இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால், தற்போது ஏதும் சேதம் அடையவில்லை, என்றார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது :- சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இதனைத் தாண்டி பணிகள் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பணிகள் விரைந்து நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கவனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதுகாத்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்த இடங்களில் 576 சாலைகள் போட வேண்டிய இடத்தில் 276 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளும் முடித்து விடப்பட்டுள்ளது, என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.