தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பாஜக எம்பியிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை எழும்பூர் அலுவலகத்தில் ஆஜரான எம்பி செல்வகணபதியிடம், சுமார் 10 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 2024 ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையம் வந்த நெல்லை விரைவு ரயிலில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 4 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று பேர் பிடிபட்டனர். இவ்வாறு பிடிபட்ட நபர்கள், நெல்லை மக்களவையில் போட்டியிட்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், அந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்கான தேர்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதனை நயினார் மறுத்தார். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மறும் தொழில் பிரிவு மாநிலத் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!
இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி மற்றும் சூரஜ் ஆகிய மூன்று பேரும், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.