சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு : 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்

17 July 2021, 9:55 pm
Quick Share

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும், சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் சிலரை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பாலியல் புகாருக்கு உள்ளான சிவசங்கர் பாபா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சிபிஐ விசாரணை வளையத்தில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுசில்ஹரி பள்ளியில் பணிபுரியும் அனைவர் மீதும் சிபிசிஐடி விசாரணையின் பிடி இருகுகிறது என்பதும், இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஊழியர்கள் என ஒட்டுமொத்தமாக விசாரணை செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 61

0

0