மரத்தில் கார் மோதி சம்பவ இடத்தில் நான்கு பேர் பலி..!!

7 August 2020, 9:50 am
Quick Share

கோவை: மரத்தில் கார் மோதி சம்பவ இடத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் 5 பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது இதில் இளைஞர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் நான்கு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்களின் பெயர்கள் இந்திரேஸ்(22), கார்த்திக் ராஜு(22), பிரதேஸ்(23), மொகன் ஹரி(23),மணிகண்டன்(22) என்று தெரிய வந்துள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது இந்த விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 35

0

0