48 மாதங்களில் அவிநாசி சாலையில் புதிய மேம்பாலம்! பணிகள் தீவிரம்!!

30 August 2020, 12:16 pm
Avinashi Bridge - Updatenews360
Quick Share

கோவை : கோவை அவிநாசி ரோடு மேம்பால பணிகளை 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை ரூ.1,157 கோடியில்10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழி மேம்பாலம் கட்டப்படுகிறது. அவிநாசி நோக்கி செல்லும் வழியில் இரு ஏறுதளம், அதேபோல் அவிநாசி பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில், இரு ஏறு தளம் இரு இயங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதாவது கோவையிலிருந்து அவனாசி நோக்கிச் செல்லக்கூடியவர்கள் அண்ணா சிலை அருகே ஜிடி நாயுடு மியூசியம் எதிரிலும், நவ இந்தியா அருகிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறு தளம்ங்கள், ஹோப்காலேஜ் அருகிலும் சித்ராவுக்கு முன்னதாகவும் இறங்கும் வகையில் இறங்கும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

பாலம் கோல்ட்வின்ஸ் பகுதியில் முடியும். இதேபோல் அவனாசி பகுதியில் இருந்து வருவோர் கோல்ட்வின்ஸ் பகுதியில் பாலத்தில் ஏறவேண்டும். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி எதிர் பகுதியிலும் ஹோப் காலேஜ் பகுதியிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறுதளங்கள் அமைய உள்ளன.நவ இந்தியா சிக்னலுக்கு 100 மீட்டர் முன்னதாகவும் அண்ணா சிலை சந்திப்புக்கு முன்னதாக பழமுதிர் நிலையம் அருகிலும் அமையும் இறங்கு தளங்களில் இறங்கிக் கொள்ளலாம்.

இப்பாலத்துக்கான டெண்டர் கடந்த ஜூன் மாதம் கோரப்பட்டது. ஜூலையில் ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டன. மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் கோாியிருந்தன. அதில் ரூபாய் 1,197.42 கோடிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 48 எட்டு மாதங்களுக்குள் 2024 ஆம் ஆண்டு பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.