கோவை குண்டுவெடிப்பு சம்பவ நினைவு தினம் : பா.ஜ.க. பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (வீடியோ)

14 February 2020, 3:54 pm
Cbe BJP Rally 02 - updatenews360
Quick Share

கோவை: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துவும், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவையில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 300 பேர் உடல் ஊனமடைந்தனர்.இந்த சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோவையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதன்படி, 22வது ஆண்டாக இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. கோவை பாரதி பார்க் சாலையில் தொடங்கிய இந்த பேரணியானது மேட்டுப்பாளையம் சாலை வழியாக சென்று டி.பி சாலை மார்க்கமாக ஆர்.எஸ்.புரம் சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு, குண்டு வெடிப்பின் போது பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Cbe BJP Rally - updatenews360

இந்த பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை மாநகரில் 3 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Cbe BJP Raly 01- updatenews360