மக்களவை தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா : கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!!
25 September 2020, 12:21 pmவேலூர் : திமுக மாநகர விவசாய அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 4 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் கொண்ட குழு வீட்டில் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடந்த நாடாளுமன்றதேர்தலின் போது துரைமுருகனின் மகனான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் அளிக்க பூத் வாரியாக திமுக மாநகர விவசாய அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் பள்ளிக்குப்பம் அருகே உள்ள வீட்டில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது .
இதனால் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது . இந்த நிலையில் மீண்டும் தேர்தல் நடைபெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் . ஆனால் இதுகுறித்து வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் தற்போது சி.பி.ஐ வசம் சிக்கியது.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை சில உளவுத்துறையினர் மிரட்டியதாக பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதனிடையே அந்த வழக்கு சம்பந்தமாக மீண்டும் சி.பி.ஐ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது