புதுச்சேரியில் அதிவேகமாக வந்த கார், மினி லாரி மீது மோதி விபத்து…3 பேர் காயம்…!!

30 October 2020, 1:02 pm
car acc - updatenews360
Quick Share

புதுச்சேரி: வில்லியனூரில் அதிவேகமாக வந்த கார், மினி லாரி மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெற்றோருடன் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உளவாய்க்கால் அருகே கார் அதிவேகமாக சென்று, எதிரே வந்த மினி லாரி மீது மோதி நொறுங்கியது. இதனால் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே, அருகில் இருந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் செல்லும் வேகத்தை குறைக்க இருபுறமும் பேரிகார்டு வைக்கப்பட்டிருந்தபோதும், அதிவேகமாக அதனை கார் கடந்ததே விபத்திற்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 18

0

0