உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் படரும் ஆகாயத்தாமரை: விரைந்து அகற்ற கோரிக்கை..!!

21 July 2021, 2:59 pm
Quick Share

கோவை: உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை படர் துவங்கியுள்ளது.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக்கரையில் பூங்காக்கள், மிதிவண்டி பாதை, குளத்தில் மிதக்கும் நடைபாதை, படகு சவாரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், குளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை அதிகளவில் படர தொடங்கியுள்ளது. மிதக்கும் நடைபாதை, படகு சவாரி செய்வதற்கான கட்டமைப்பு ஆகியவற்றை ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. அவற்றை அகற்றாவிட்டால் நாளடைவில் அப்பகுதி முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததற்றதாக மாறிவிடும் எனக்கூறும் சூழலியல் ஆர்வலர்கள், குளங்களில் நேரடியாக கழிவுகள் கலப்பதாலே இதுபோன்று ஆகாயத்தாமரை படருவதாகவும், அதற்கு தீர்வுக்காணாமல் குளத்தில் உயிர் சூழல் பாதிக்கப்படும் வகையில் பொழுதுபோக்கு அமசங்களாக மாற்றுவது ஏற்புடையது இல்லை என்கின்றனர்.

ஏற்கனவே, மாநகராட்சி கீழ் உள்ள குளங்களில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் நொய்யல் புனரமைப்பு திட்டத்தால் குளங்களின் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படுவதுடன், குளங்களில் நீர் தேக்க பரப்பளவு குறைந்துள்ளதாகவும், அதனால் திட்டத்தை மாற்றியமைக்கவும் கோவையை சேர்ந்த 11 சூழலியல் அமைப்புகள் ஆதரங்களை முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்பியுள்ளனர்.

Views: - 158

0

0