கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வழக்கு : கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 8:39 pm
Tirupur Gundas - Updatenews360
Quick Share

திருப்பூர் : கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, நொச்சிபாளையம் பிரிவிலிருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில், சுப்பிரமணி என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட அருண்குமார் , பிரவீன் மற்றும் ராமர் ஆகிய 3 பேர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொது அமைதிக்கும், ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபுஉத்தரவிட்டார்.

இதை அடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் வழங்கப்பட்டுள்ளது

Views: - 785

0

0