தஞ்சை ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டது குறித்து கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.11) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் பங்கேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், அந்த புகாரில், “கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செலோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் எங்களுக்கு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசிய பள்ளித் தலைமையாசிரியை புனிதா, “வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செலோ டேப்’ ஒட்டி உள்ளனர். அந்த வகுப்புக்கு நான் சென்ற போது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு நான் கூறினேன்.
மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டு இருந்ததை புகைப்படம் எடுத்தது யார் என எனக்குத் தெரியவில்லை. என்னிடமும், மாணவர்களிடமும் வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது முழு விளக்கத்தையும் தெரிவித்து உள்ளேன்’’ எனக் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: என்ன யோக்கியதை இருக்கு.. சீமானை மீண்டும் வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி!
மேலும், இது தொடர்பாக பேசி உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், “அக்டோபர் 21ஆம் தேதி அன்று, குறிப்பிட்ட அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையை கவனித்துக் கொள்ளும்படி கூறி உள்ளனர். அந்த மாணவர் தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டி உள்ளார்.
எனவே, ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தர வட்டாரக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.