பாடகர் எஸ்பிபியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களிடம் செல்போன் பறிப்பு

26 September 2020, 10:26 pm
Quick Share

திருவள்ளூர்: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடிகர், செய்தியாளர், பெண் உள்ளிட்ட 5 பேரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி அவரது விவசாய பண்ணை இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதையும் மீறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிக்கும் கும்பல் நடிகர் சிவா,தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஐந்து பேரிடம் செல்போன் பறித்துச் சென்றது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அங்கு சுற்றித் திரிந்த 20 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் செல்போன்கள் அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் பறி போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.