இப்படி ஒரு மரணமா.! சாலையில் பைக்கில் சென்றவர் மீது செல்போன் டவர் விழுந்து பலி.!!

4 August 2020, 2:54 pm
Cell Phone Tower Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் சேதமடைந்து பல்லடம் சாலையில் சரிந்தது இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செங்கிஸ்கான் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் கோபுரம் சரிந்ததில் காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் செங்கிஸ்கான் உடலைக் கைப்பற்றி சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 9

0

0