சிமெண்ட் விலை நிர்ணயம் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு..!
31 August 2020, 3:11 pmசென்னை : தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு குறித்து 4 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
2019ம் ஆண்டு ஜுலை மாதம் ரூ. 340க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிமெண்ட்டின் விலை தற்போது 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, சிமெண்ட் விலை குறித்து கொள்கை ரீதியிலான முடிவை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலித்து, சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு 80 லட்சம் டன் சிமெண்ட் தேவைப்படும் நிலையில், அம்மா சிமெண்ட் மற்றும் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மூலம் 7 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில ரூ. 65 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே, நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் சுந்தரேசன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிமெண்ட் விலையை நிர்ணயம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு குறித்து 4 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0
0