கார் மீது சிமெண்ட் லாரி மோதி பயங்கர விபத்து : ஓட்டுநர் பரிதாப பலி… 3 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 12:59 pm
Accident - Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியான நிலையில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் கிளாசிக் பிளாக், ஜே.பி நகரை சேர்ந்த பிரசன்னா என்பவர் தனது மனைவி அனுராதா மகன் சாய்பிரணவ் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் கார் வந்தபோது எதிரே 40 டன் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த பல்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கார் டிரைவர் ஷேக் ஜெய்லான் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 596

0

0