தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

11 July 2021, 2:17 pm
School Educaton - Updatenews360
Quick Share

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும் என்றும் மிக குறைந்த பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில், இது ஏற்புடையதல்ல என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பள்ளிகள் ஜூலை 20ம் தேதிக்குள் பதிவு செய்து (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் பெற்றாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சான்று பெறுவதை கண்காணித்து அறிக்கை தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Views: - 132

0

0