மொழி, கலாச்சாரத்தை சீரழிக்க கூடிய அரசு மத்திய அரசு : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!!

27 February 2021, 4:44 pm
Rahul-Updatenews360
Quick Share

தூத்துக்குடி : நாட்டின் மொழியை கலாச்சாரத்தை சீராழிக்க கூடிய அரசாக மத்திய அரசு உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்  தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தூத்துக்குடி வருகை தந்தார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகைதந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் உள்ளிட்ட திமுகவினர் வரவேற்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் இந்த வழக்கறிஞர் ஆலோசனை கூட்டத்தில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர் கலந்துகொண்டு வழக்கறிஞர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தியிடம் கலந்துரையாடினார்கள்.

அப்போது அதற்கான தீர்வு ஏற்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுக்கும் என ராகுல் காந்தி உறுதி அளித்தார்கள். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலை அருகே பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்
அப்போது பேசிய ராகுல் காந்தி நாட்டிலேயே என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் மத்திய அரசு இந்த மக்களுக்கான சட்டங்களையும் மதிப்பதில்லை தமிழ் பண்பாட்டை மிகவும் இழிவாக நினைக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு நாங்குநேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி சிறப்புரை ஆற்றவுள்ளார் இந்த பிரச்சார பயணத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள்  ஊர்வசி அமிர்தராஜ் ,முரளிதரன், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Views: - 11

0

0