சென்னை, மதுரை, நெல்லையில் பிளாஸ்மா தானம் செய்ய அனுமதி : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!

13 August 2020, 1:56 pm
vijayabaskar1 - updatenews360
Quick Share

சென்னை : சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானத்தை வழங்கினர். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது :- கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானத்தை வழங்கினர். அமைச்சர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 20 நாட்களில் 76 நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளனர். ஒரு நபர் பிளாஸ்மா தானம் வழங்குவதன் மூலம் இரு உயிர்களை காப்பாற்றலாம். இதுவரை பிளாஸ்மா தானத்தின் மூலம் 2,56,310 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் மாவட்டங்களில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 81% சதவிகிதம் பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நோய் அதிகம் உள்ள மாவட்டங்களில் படிப்படியாக நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு சிறந்த முறையில் எடுத்து வருகிறது.

சர்வதேச உடல் உறுப்பு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுவதை யொட்டி பொதுமக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0