மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து செயின் பறிப்பு : போலீசாரிடம் சிக்கிய ஆதாரம்.. பதுங்கிய புள்ளிங்கோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2021, 11:57 am
Cbe Theft -Updatenews360
Quick Share

கோவை : மளிகை கடையில் பொருள்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் எம்.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார்.

நேற்று இவரது மனைவி தனலட்சுமியும் கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கேடிம் பைக்கில் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் மாஸ்க் மற்றும் குல்லா அணிந்திருந்தனர். இதையடுத்து அவர்கள் சிகரெட் வேண்டும் என்று தனலட்சுமியிடன் கூறியதாக தெரிகிறது. தனலட்சுமி சிகரெட் எடுக்க திரும்பும் போது அந்த நபர்கள் இரண்டும் தனலட்சுமி அணிந்திருந்த ஐந்தரை சவரன் தாலி மற்றும் அரை சவரன் கமலை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியும், அவரது கனவர் செல்வமும் கூச்சலிட்டு கொள்ளையர்களை துரத்தியுள்ளனர். இதில் கிழே விழுந்ததில் செல்வத்திற்கு கைகளில் காயம் ஏற்பட்டது.

கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பித்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோவையில் அடிக்கடி நடக்கும் இந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Views: - 495

0

0