மளிகை கடையில் நின்றிருந்த பெண்ணிடம் நொடிப் பொழுதில் செயின் பறிப்பு : பைக்கில் வந்த கயவர்கள் தப்பியோட்டம்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 8:42 pm
Chain Snatch - Updatenews360
Quick Share

பழனியில் பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் இடும்பன் கோயில் ரோட்டில் வசித்துவருபர் தங்கவேலு. இவரின் மனைவி தங்கப்பொண்ணு வீட்டின் அருகே உள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்ட இளைஞர் கடையில் பொருட்களை வாங்குவது போல அந்தப் பெண்ணின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளான்.

திடிரென கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கபொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கநகையை பறித்துக்கொண்டு, கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பியோடியுள்ளான்.

தங்கப்பொண்ணு எழுந்து கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்த்தில் இருந்தவர்கள் திருடர்களை விரட்டியுள்ளனர். இதனிடையே அருகில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொரு இளைஞருடன் நகை பறித்துக்கொண்டு ஓடி வந்த நபர் தப்பி சென்றுள்ளான்.

இந்தநிலையில் நகையை பறிகொடுத்த தங்கபொண்ணு பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

பழனி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்மநபர்கள் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 407

0

0