தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: உங்க மாவட்ட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Aarthi Sivakumar
4 September 2021, 1:55 pm
Quick Share

சென்னை : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, சேலம், ஏத்தாப்பூரில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது. பட்டுக்கோட்டை, மணமேல்குடி – 9; ராசிபுரம், மதுக்கூர் – 8; முத்துப்பேட்டை, மணப்பாறை, கரூர் – 7; பாப்பிரெட்டிப்பட்டி, அரிமளம், பேராவூரணி – 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 276

1

0