ஒரே இடத்தில் மையம் கொண்ட ‘புரெவி’ புயல்: தொடரும் கனமழை எச்சரிக்கை…!!

4 December 2020, 11:01 am
purvi updatenews360
Quick Share

சென்னை: ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‘புரெவி’ புயல், தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே, 40 கி.மீ., பாம்பனுக்கு மேற்கு தென்மேற்கு திசையில் 70 கி.மீ., தொலைவில் உள்ளது. இது, அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும். இதனால், காற்றானது மணிக்கு 55- 65 கி.மீ., வேகத்தில்வீசக்கூடும். சில நேரங்களில், மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 8 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது. கொள்ளிடம் 36 செ.மீ., சிதம்பரம் 34 செ.மீ., பரங்கிப்பேட்டை 26 செ.மீ., மணல்மேடு, குறிஞ்சிப்பாடியில் தலா 25 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 22, சீர்காழி, குடவாசலில் தலா 21 செ.மீ., ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., பேராபூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறையில் தலா 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Views: - 0

0

0