தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…அடுத்த 5 நாட்களுக்கு உஷார் மக்களே: வானிலை மையம் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
26 October 2021, 2:14 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை திங்கட்கிழமை தொடங்கியது. பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.

இந்நிலையில் இன்று முதல் 30ம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

வரும் 29ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்றும் இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 479

0

0