வந்தாச்சு அலர்ட்: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

Author: Aarthi
27 July 2021, 2:07 pm
Quick Share

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai metrology - updatenews360

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்பட எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்த வரை இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாமெனவும், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 152

0

0