இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது: மக்களே உஷார்!!

19 July 2021, 9:19 am
Heavy Rain - Updatenews360
Quick Share

சென்னை: நான்கு மாவட்டங்களில் இன்று கன மழையும் 10 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

Rain - Updatenews360

கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கன மழை பெய்யும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வடமேற்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 149

0

0