கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2021, 3:43 pm
Rain - Updatenews360
Quick Share

கோவை : கோவை, நீலகிரி உட்பட ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று வட கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்மாவட்டங்கள்‌ மேலும்‌ நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேகமாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்‌.

நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, எஞ்சிய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேகமாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

Views: - 126

0

0