இன்னைக்கு 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு : உங்க மாவட்டத்தோட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2021, 1:46 pm
Rain- Updatenews360
Quick Share

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,நீலகிரி,கோவை மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,பிற மாவட்டங்களின் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை,தேனி, திண்டுக்கல், கன்னியாக்குமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இலேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Views: - 220

0

0